உண்மையிலேயே உங்க ராசிப்படி நீங்க வீட்டுல இந்த இடத்தில் தான் அதிக நேரத்தை செலவிடுவீங்க! யாருக்கும் தெரியாத ரகசியங்கள்

ஒவ்வொருவருக்கும் அவர்களுடையை வீடுகளில் அவர்களுக்கு என்று மிகவும் பிடித்த இடங்கள் உள்ளன.

அவர்கள் அந்த இடங்களுக்கு விரும்பிச் சென்று தங்கள் ஓய்வு நேரங்களைச் செலவிடுவர்.

இந்தக் கட்டுரையில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்களுடைய வீடுகளில் எந்தெந்த இடங்களை விரும்புகின்றனர் மற்றும் அவர்களுக்கு ஏற்ற இடங்கள் எவை என்று பார்க்கலாம்.

மேஷம்
பொதுவாக மேஷ ராசிக்காரர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில், தங்களுக்குப் பிடித்த காரியங்களைச் செய்து மகிழ்வர். அதனால் அவர்களுக்குப் பிடித்த இடங்கள் வீட்டுத் தோட்டம் அல்லது வீட்டிலுள்ள உடற்பயிற்சிக் கூடம் அல்லது சமையல் பொருட்கள் வைத்திருக்கும் அறை ஆகும்.

ரிஷபம்
பொதுவாக ரிஷப ராசிக்காரர்கள் நாள் முழுதும் கடினமாக வேலை செய்து முடித்த பின்பு இதமான வெந்நீரில் நீண்ட நேரம் குளித்து மகிழ விரும்புவார்கள். அதனால் வீட்டில் அவர்களுக்கு மிகவும் பிடித்த இடம் குளியலறை ஆகும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு உரையாடுவது என்றால் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அதனால் வீட்டில் உள்ள விருந்தினர் அறையை அவர்கள் மிகவும் விரும்புவர். மேலும் புத்தக அலமாரி இருக்கும் பகுதியும் அவர்களுக்குப் பிடிக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை ஆழமாக அன்பு செய்வதிலும், அவர்களைப் பாராமரிப்பதிலும் அதிக ஆர்வமாக இருப்பர். அதனால் எப்போதுமே தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு முன்னுரிமை கொடுப்பர்.

அதனால் அவர்களுக்குப் பிடித்த இடம் சமயலறை ஆகும். தங்களின் குடும்ப உறுப்பினர்கள் விரும்பும் உணவுகளை சமைத்து அவர்களை உபசரிக்கலாம் என்று எண்ணுவர்.

சிம்மம்
பொதுவாக சிம்ம ராசிக்காரர்கள், குளியலறையில் அதிக நேரத்தைச் செலவிடுவர். குளியலறை அவர்களின் களைப்பை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் இடமாக இருக்கிறது.

மேலும் கண்ணாடியை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருப்பது, பகல் கனவு காண்பது மற்றும் தங்களுக்கு இன்பம் அளிக்கும் காரியங்களை நினைத்துக் கொண்டிருப்பது போன்றவை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் பிடித்த இடம் படுக்கையறை ஆகும். அவர்கள் படுக்கையறையை மிகவும் சுத்தமாக வைத்திருப்பர். தங்களது தனிமையான நேரத்தை சுத்தமான படுக்கையறையில் செலவிட விரும்புவர்.

வீடு அழுக்காக இருந்தால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பொதுவாக வெளியில் சென்று அடுத்தவர்களோடு தங்களது நேரத்தை செலவழிக்க விரும்புவர். அதனால் அவர்கள் வீட்டிற்குள் வந்தாலும், அனைவரும் கூடியிருக்கும் பொதுக்கூடத்தில் தங்கி மற்றவர்களோடு பேசிக் கொண்டிருப்பதையே விரும்புவர்.

விருச்சிகம்
பொதுவாக விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் ரகசியமாக இருக்க விரும்புவர். அதனால் அவர்களுக்கு மிகவும் பிடித்த இடம் படுக்கையறை ஆகும். படுக்கையறையில் மிகவும் அமைதியாக, தனிமையாக மற்றும் நீண்ட நேரம் தூங்க விரும்புவர்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் திறந்த மனதுடன் இருப்பர். அதனால் அவர்களுக்கு மிகவும் பிடித்த இடம் வராண்டா ஆகும். மேலும் இவர்கள் இயற்கையோடு தங்களை ஐக்கியமாக வைத்திருப்பர்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் எப்போதும் வேலை செய்வதிலேயே குறியாக இருப்பார்கள். அதனால் தங்கள் வீட்டையே அலுவலமாக மாற்றி விடுவர். அதோடு தனியாக இருக்கும் போது கூட வேலை இருக்கும் இடத்தில் தான் இருப்பர்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் பிடித்த இடங்கள் வீட்டுத் தோட்டம் மற்றும் வீட்டு கொல்லைப்புறம் ஆகும். மேலும் அவர்களின் ஓய்வான நேரங்களில் தங்களின் மனைவி அல்லது கணவர், பிள்ளைகள் மற்றும் நண்பர்களோடு இருப்பதையே விரும்புவர். அதோடு இயற்கையோடு மிகவும் நெருக்கமாக இருப்பதையும் பெரிதும் விரும்புவர்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் பொதுவாக அனைவரும் கூடியிருக்கும் பொதுவான அறையைத்தான் விரும்புவர். அதே நேரத்தில் அவர்கள் கற்பனைத் திறன் மிகுந்தவர்களாக இருப்பர். பொதுவான அறையே அவர்கள் பகல் கனவு காண்பதற்கும் மற்றும் அவர்களின் அன்றாடக் கடமைகளைத் திட்டமிடுவதற்கும் தகுந்த இடமாக இருக்கிறது.