அதிரடியாக அடுத்த ஐபிஎல் தொடரில் CSK தக்க வைத்து கொள்ளும் 5 வீரர்கள் இவர்கள் தான் ! வெளியான ரிப்போர்ட் இதோ

சென்னை அடுத்த ஐபிஎல் தொடரில் எந்த 5 வீரர்களை தக்க வைத்து கொள்ள முடிவு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தாண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால் பிளே ஆப்பிற்கு கூட செல்ல முடியாமல், லீக் தொடரிலே வெளியேறியது. அந்தணியின் தலைவரான டோனி புதிய அணியை கட்டமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறிவிட்டு சென்றார்.

இதன் காரணமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் ஏலத்திற்கு முன்னர் தங்களுக்கு தேவையான ஒரு சில வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்க வைத்துக் கொள்ளலாம்.

அதன் படி சென்னை அணி, அடுத்த ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, டூ பிலஸ்ஸிஸ் மற்றும் டோனி ஆகியோரை மட்டும் வைத்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது