திசை மாறிப்போன நடிகை நயன்தாராவின் நிறைவேறாத ஆசை உண்மையில் இதுவாக தான் அசைபட்டாராம்..! வெளியான சுவாரஸ்யமான தகவல்

தமிழ் சினிமாவில் இவ்வளவு புகழையும், விமர்சங்களையும் எந்த ஒரு நடிகையும் பெற்றிருக்க முடியாது என்றால் அது நடிகை நயன்தாரா தான்.

லேடி சூப்பர் ஸ்டார் என்ற ஒரு பட்டத்திற்கு சொந்தக்காரராக இருப்பவர் நயன்தாரா, இவர் நடிகர்களுக்கு சமமாக ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளார் எனவும் கூறலாம்.

இவர் நடிப்பில் RJ பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் OTT-யில் வெளியாகி எதிர்பார்த்ததை விட மிக பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

மேலும் நேற்று இவரின் பிறந்தநாள் என்பதால் அவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் இயற்பெயர் பெயர் டயானா மரியம் குரியன், இவர் கேரள மாநிலம் திருவல்லாவில் இருக்கும் மார்தோமா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த நயன்தாரா சார்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக விரும்பினாராம்.

ஆனால் பின்னர் மாடலிங்கில் கவனம் செலுத்திய நயன்தாரா, படங்களில் நடிக்க ஆரம்பித்து தனது வாழக்கை பாதையையே மாற்றி அமைத்து கொண்டார்.