ஜஸ்ட் ஒரே ஒரு டீசர் தான் தனுஷின் மார்க்கெட்டை ஒரே அடியாக காலி செய்த சிம்பு! நீங்களே பாருங்க

ஆரம்ப காலகட்டங்களில் தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவருக்கும் இடையே செம போட்டி இருந்தது. அதில் பெரும்பாலும் சிம்புவே வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சிம்புவின் சினிமா வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது அனைவருக்குமே தெரியும்.

தொடர்ந்து சில வருடங்கள் எந்த படமும் வெளிவராமல் இருந்தது. மேலும் நடித்த படங்களும் மிக மோசமாக அமைந்து சிம்புவின் மார்க்கெட்டுக்கு ஆப்பு வைத்ததாக அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் சிம்புவுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்திற்கு அவர் எப்போது வந்தாலும் மாஸ் தான் என்பதற்கு அடையாளமாக அமைந்துள்ளது ஈஸ்வரன் டீசர்.

தீபாவளியை முன்னிட்டு சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியாகி கிட்டத்தட்ட ஆறு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

அதேபோல் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ரிலீஸாக இருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் புஜ்ஜி என்ற வீடியோ பாடல் வெளியானது. ஆனால் வெறும் 4 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது அந்த பாடல்.

மார்க்கெட்டே இல்லாத சிம்புவின் டீசர் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் உலக அளவில் ஃபேமஸான தனுஷின் புஜ்ஜி பாடல் ரசிகர்களை கவரவில்லை. மீண்டும் தனுஷ், சிம்பு மோதல் ஆரம்பமானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.