செப்டம்பர் 10ம் தேதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வண்ணம் வந்த செய்தி காமெடி பிரபலம் வடிவேல் பாலாஜி மரணம்.

மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள அவர் கை, கால்கள் திடீரென செயல் இழந்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

அவருடன் பணியாற்றிய பிரபலங்கள் பலர் இப்போதும் அவரை மறக்க முடியவில்லை, எங்களை தவிக்கவிட்டு சென்றுவிட்டார் என புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் வடிவேல் பாலாஜியின் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் தனது மகனின் பிறந்தநாளை (ஜுலை 17) கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது வெளியாக பலரும் வடிவேல் பாலாஜி பற்றி வருத்தம் தெரிவிக்கின்றனர். இதோ அந்த புகைப்படம்,