நடிகை ராதிகா ஆப்தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் நிர்வாணமாக ஓடுவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த போஸ்டர் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார். “Hot Potato” என்ற பத்திரிக்கையின் அட்டமான இது தனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

வேலூரில் பிறந்து பூனாவில் வளர்ந்த ராதிகா ஆப்தே பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் தோனி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. அதன்பின் ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினிக்கு ஜோடியாக கபாலி திரைப்படத்தில் நடித்தார். பாலிவுட்டில் பரபரக்கும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வரும் ராதிகா ஆப்தே.

ஒரு சில படங்களில் ஆடையே போடாமல் கூட நடித்திருக்கிறார். இதனால் கதைக்கு சம்மதம் இல்லாமல் கவர்ச்சியாக நடிக்க சொல்லும் கதைகளாக வருகிறது என கூறி அது போன்ற படவாய்ப்புகளை மறுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.