இன்று அமேசான் பிரைம்மில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு நடுவில் நேரடி ரிலீஸ் ஆன ஐந்து ஷார்ட் பிலிம்களின் ஆந்தாலஜி தொகுப்பே புத்தம் புது காலை. கோலிவுட்டின் டாப் 5 இயக்குனர்கள், கொரோனா மற்றும் லாக் டவுன் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் தான் இவை.

சுதா கொங்கராவின் இளமை இதோ இதோ (தங்கள் லைப் பார்ட்னரை இழந்த வயது முதிர்ந்த இருவருக்கும் இடையிலான காதல்), கவுதம் வாசுதேவ் மேனனின் அவரும் நானும் அவளும் நானும் (தாத்தாவுக்கும் பேத்திக்கும் இடையிலான பாசம்), சுகாசினி மணிரத்னம் இயக்கி நடித்த காஃபி எனி ஒன்? (நோயாளியை மருத்துவமனையில் உள்ளதை விட குடும்ப சூழலில் எவ்வாறு குணப்படுத்த முடியும்), ராஜீவ் மேனனின் ரியூனியன் (இன்று டாக்டர், போதைக்கு அடிமையான இருவரின் பாலிய மற்றும் இன்றைய காதல்) , கார்த்திக் சுப்புராஜின் மிராக்கில் (யாருக்கு லக் அடிக்கிறது அதீத பணம் கிடைக்கிறது).

அமேசானுக்கு என எடுத்ததன் காரணத்தாலோ என்னவோ சற்றே ஹை பைய்யாகவே உள்ளது படங்கள். இறுதியில் கார்த்திக் சுப்புராஜ் பாபி சிம்ஹாவை வைத்து லோக்கல் ஸ்டைலில் குடுக்க முயற்சித்தாலும், அது சொல்ல வருவது என்ன என்பது பலருக்கும் புரியாத புதிர்.

சுதா கொங்காரா வயதானவர்களின் காதலை சொல்ல இளம் நடிகர் – நடிகைகளை பயப்படுத்தியது புதிய யுக்தி. கெளதம் மேனனின் படத்திற்கு பக்க பலமெனில் எம் எஸ் பாஸ்கரின் நடிப்பு தான். நம்மில் பலர் ரிலேட் செய்யக்கூடிய கதையும் இது தான்.

சுஹாசினி மணிரத்தினம் வசூல் ராஜா பட பாணியில் சென்றாலும், அதில் குடும்பம், பெண், அவளின் உரிமை போராட்டம் என பலவற்றை அதில் புகுத்தியுள்ளார். பெண்ணியம் பேசுபவர்களிடம் லைக்குகள் அள்ளும். அடுத்ததாக ராஜீவ் மேனன், இவர் எடுத்தது மெல்லிய ஒன் லைன் தான். இசை என்பது எப்பேர்பட்டவர்க்கும் நல்ல அருமருந்து என சொல்லியுள்ளார். எதற்கு இதனை எடுத்தார் என்றே யோசிக்க தோன்றுகிறது.

சூப்பர் ஆன மேக்கிங், நல்ல நடிகர் நடிகையர் தேர்வு, உறுத்தல் இல்லாத இசை என ஸ்டைலிஷ் மேக்கிங் தான் இது. பாஸிட்டிவ் விஷயங்களை மட்டுமே சொல்ல முயற்சித்துள்ளனர் டீம் ஒர்க் ஆக. எளிமையான கதை, ஆர்ப்பாட்டம் இல்லாமல் பீல் குட் மூவி இந்த குறும்படங்கள்.

வீக்கெண்ட் பொழுதை கழிக்க என செல்லும் இளசுகளுக்கு ஏமாற்றமே கிடைக்கும். ஆனால் சற்றே வயதான ஆடியன்ஸுக்கு சற்றே உயர் ரக டெய்லி சீரியல் பார்க்கும் அனுபவத்தை தான் கொடுக்கும்.