மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று, அவரின் ரசிகர்கள் பலருக்கும் பல விதமான எதிர்பார்ப்புகள் இருந்தது.

ஆனால் மீண்டும் 4ஆம் முறையாக ஏ.ஆர்.முருகதாஸுடன் தனது 65வது படத்தை கொடுத்துள்ளார் விஜய். ஆம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கூறிய விரைவில் நடைபெறவிருக்கிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், இது ஏறக்குறைய உறுதியான தகவல் தான். இந்நிலையில் விஜய்க்கு இந்த கதையை கூறுவதற்கு முன், பல வருடங்களுக்கு ,முன்பு இந்த இதே கதையை தல அஜித்துக்கு கூறியுள்ளாராம் ஏ.ஆர். முருகதாஸ்.

ஆனால் இந்த கதை அஜித்துக்கு பிடிக்காமல் போனதால், வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இதன்பின் சில மாற்றங்கள் மற்றும் செய்து, தளபதி விஜய்க்காக இந்த கதையை தயார் செய்துள்ளாராம்.

மேலும் இப்படத்திற்கு முதன் முதலில் ‘ ரெட்ட தல ‘ என்று தலைப்பு வைத்திருந்தாராம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் என தகவல்கள் வெளியாகியுள்ளது.