தமிழ் சினிமாவில் வெளியாகி மாஸ் ஹிட்டான படம் தான் ‘வேதாளம்’. மேலும் சிறுத்தை சிவா இயக்க இந்தப்படத்தில் தல அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி போன்ற பல பிரபலங்கள் திறமையாக நடித்திருப்பர்.

இந்நிலையில் தற்போது வேதாளம் படத்தை தெலுங்கில் இயக்குனர் மெஹர் ரமேஷ் ரீமேக் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது படத்தில் நடிப்பதற்காக நடிகர் நடிகைகளையும் தேர்வு செய்து கொண்டிருக்கிறாராம். அந்த வகையில் பிரபலமான இரண்டு இளம் நடிகைகளில் ஒருவர் படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் ரமேஷ்.

மேலும் மெஹர் இந்த லாக் டவுன் பிரிடை ஸ்க்ரிப்ட் எழுதுவதற்காக பயன்படுத்தி இருக்கிறார். தற்போது ஸ்கிரிப்ட் எழுதி முடித்த நிலையில் அதில் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து வருகிறாராம். இந்தப் படத்திற்கான ஹீரோ ரோலுக்கு சிரஞ்சீவியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் மெஹர் ரமேஷ்.

அந்த வகையில் மெஹர் ரமேஷ் ‘வேதாளம்’ படத்தில் தல அஜித்திற்கு தங்கையாக நடித்த லட்சுமிமேனனின் ரோலுக்கு சாய் பல்லவி அல்லது கீர்த்தி சுரேஷ் ஆகிய இரண்டு பேரில் ஒருவரை நடிக்க வைக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.

ஏனெனில் ‘வேதாளம்’ படத்தில் மிக முக்கியமான ரோல் லட்சுமிமேனன் ரோல் தான். மேலும் இதற்காக பல பாராட்டுகளைப் பெற்றார் லட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.