இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதை ‘800’ என்கிற தலைப்பில் படமாகவுள்ளது. இதில், முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

ஆனால், இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படும் முத்தையா முரளிதரன் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என இலங்கை தமிழகர்கள் மற்றும் இலங்கை தமிழர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர்களும் சமீபத்தில் வெளியானது.

ஆனாலும், பாரதிராஜா, இயக்குனர் சேரன், சீனுராமசாமி மற்றும் பாடலாசிரியர் தாமரை உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் நடிப்பது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதியிடம் நடிகர் அஜித் தொலைப்பேசியில் பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.