பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரவாரமாக தற்போது சென்றுகொண்டிருக்கிறது. போட்டியாளர்களும் டாஸ்குகளை சுயநலமாகவும், திறமையாகவும் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிப்பதற்காக டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது.

இந்த டாஸ்க்கில் ஷிவானி, பாலாஜி முருகதாஸ், ஆரி, அறந்தாங்கி நிஷா உள்பட ஒருசிலர் நன்றாக விளையாடினாலும் இறுதியில் சனம்ஷெட்டி- வேல்முருகன் கூட்டணியே வெற்றி பெற்றது.

இதனால், இந்த வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவித்த பிக்பாஸ், அடுத்த வாரம் சனம்ஷெட்டி, வேல்முருகன் ஆகிய இருவரையும் யாரும் நாமினேஷன் செய்யக்கூடாது என்று அறிவித்தார்.

இதனால், கொண்டாட்டத்தின் உச்சிக்கு சென்ற வேல்முருகன் தனது கூட்டாளியான சனம் ஷெட்டியை அவர் வெறித்தனமாக கட்டிப்பிடித்தது பார்வையாளர்களை அதிர வைத்தார்.

ஒரு கட்டத்தில் சனம்ஷெட்டியே கொஞ்சம் நெளிந்து அவரிடமிருந்து விலக முயற்சித்ததும், ஆனாலும் வேல்முருகன் விடாமல் அவரை இறுக்கமாக கட்டிப்பிடித்து தனது சந்தோஷத்தைக் வெளிக்காட்டினார்.

மேலும், வேல்முருகன் சனம்ஷெட்டியை சகோதரி என்று தான் அழைத்து கொண்டிருக்கிறார் என்பதும் இந்த கட்டிப்பிடித்தலில் எந்த விதமான தவறான எண்ணமும் இல்லை என்றாலும் பார்வையாளர்களை முகம் சுழிப்பது போலவே இருந்தது. இதற்கு இணையத்தில் மீம்ஸ்களை தற்போது வைரலாக பரவி வருகிறது.