விஜய் டிவி தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்4 நிகழ்ச்சியின் மூலம் நாள்தோறும் சுவாரசியம் குறையாமல் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது.

இதில் விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான ரியோவும் ஒரு போட்டியாளராக களமிறங்கி மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகிறார்.

இந்த நிலையில் புது திருப்பமாக போட்டியாளர் ரியோவிற்கு மட்டும் வெளியிலிருந்து அவருடைய குடும்பத்தினரின் சமீபத்திய புகைப்படம் பிக்பாஸ் வீட்டில் சீக்ரெட்டாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டோவில் ரியோவின் மகள் ரித்தி இருப்பதாக தெரிகிறது. இதை ஒரு சில போட்டியாளர்களிடம் மட்டுமே காண்பித்து விட்டு மறுபடியும் தனது சொந்த உடமைகளுக்கும் மறைத்து வைத்துவிட்டார் ரியோ.

எனவே பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நிஷா, சம்யுக்தா, ரமேஷ், ஆரி, ரேகா என பலருக்கும் குடும்பமும் குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் அவர்களுக்கு இல்லாத சலுகை ரியோவிற்கு மட்டும் ஏன் கொடுத்துள்ளது விஜய் டிவி? என்ற கேள்வி பிக்பாஸ் ரசிகர்களிடைய எழ தொடங்கியுள்ளது.

ஒரு பக்கம் சில ரசிகர்களின் மனதில், “ரியோ ஒருவேளை பிக்பாஸ் இடம் தனது குழந்தை நியாபகம் வருவதால் போட்டோ வேண்டும் என்று கேட்டிருப்பாரோ?” என்ற எண்ண ஓட்டத்திலும் உள்ளனர்.

எது எப்படி இருந்தாலும் இந்த சீசனில் விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் இருப்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று பிக்பாஸ் சீசன்-4 தொடங்குவதற்கு முன்பதாகவே மக்களின் கணித்துவிட்டனர்.