பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4ஆம் தேதி ஆரம்பமாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக மக்களுக்கு அதிகம் தெரிந்திடாத சுரேஷ் சக்ரவர்த்தி தான் அந்நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமாகி வருகிறார். மேலும் மற்ற ஹவுஸ் மேட்ஸ்களிடம் இவரின் தந்திரமான யுக்தியை பயன்படுத்தி டப் கொடுத்து வருகிறார் என்றே கூறலாம்.

இந்நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகன் புற்றுநோய்யால் பாதிக்கப்பட்டு இருந்தார் எனவும் அவர் குறித்த ஒரு சில விஷங்களையும் கூறியிருந்தார்.

மேலும் அவரது மகனுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்து ஒரு பழைய பேட்டியில் கூறியுள்ளார். ஆம் தனது மகனுக்கு புற்றுநோய் சிகிச்சை அளித்த பின் ஒரே இடத்தில் 5 அல்லது 6 நாட்கள் இருக்க வேண்டுமாம்.

மேலும் தனது மகன் மன ரீதியாக பல கஷ்டங்களை அனுபவித்தாகவும், ஆனால் அப்படி இருக்கையில் கூட அனிருத்தின் பாடலை கேட்டால் எழுந்து ஆட ஆரம்பித்து விடுவான் என கூறியுள்ளார்.