தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவருக்கு இந்திய அளவில் மிக பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது.

பிகில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார். மேலும் இப்படமும் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் பிரபல செய்திவாசிப்பாளராக இருந்து தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நுழைந்துள்ளவர் அனிதா சம்பத். இவர் செய்திவாசிப்பாளராக இருந்தபோது தளபதி விஜய்யை முதலில் பார்த்தது குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அனிதா சம்பத் கூறியதாவது “அவர் ரொம்ப சிம்பிள்ளாக காரிலிருந்து இருந்து இறங்கினர். அவரை எல்லாரும் பிரமிப்பாக பார்த்தனர். ஆனால் அவரோ அங்கிருப்பர்களிடம் சாதாரணமாக கையசைத்து விட்டு சென்றார்.

அவர் நினைத்திருந்தால் அங்கிருப்பர்களை கவனிக்காமல் சென்றிருக்கலாம். ஆனால், தோட்டக்காரர்கள் உட்பட அனைவர்க்கும் கையசைத்து விட்டு சென்றார். அன்றிலிருந்து அவரை எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பித்தது” என கூறியுள்ளார்.