தல ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் படம்தான் ‘வலிமை’. இதில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் இரண்டாவது முறையாக தல அஜித் இணைந்து இருப்பது அனைவரும் அறிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த படத்தின் சுவாரஸ்யமான தகவலை வலிமை படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார்.

அதில் “அஜீத் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் வலிமை படம் செம்ம மாஸாக இருக்கும்” என்று யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார்.

மேலும், இந்த படத்தில் தல அஜித் செம மாஸ் காட்டிய உள்ளதாகவும், சண்டைக் காட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் கசிகிறது.

எனவே, ஒவ்வொரு நாளும் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு யுவன் சங்கர் ராஜாவின் இந்த அப்டேட் தல அஜித்தின் வெறியர்களுக்கு தீனி போட்டது போல் இருக்கும்.
இந்த செய்தியை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெறிக்க விடுகின்றனர்.