பிரபல பின்னணி பாடகரியான சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது புகார் கூறியிருந்த நிலையில், தற்போது வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட 17-வது பெண் குறித்து சின்மயி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவி மீ டூ பிரபலமான போது, பாடலாசிரியரான வைரமுத்து மீது, பாடகி சின்மயில் புகார் கொடுத்தார். அதன் பின் அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான தகவல்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.

இது குறித்த கேள்விக்கு வைரக்கு நான் இதை சட்டப்படி சந்தித்து கொள்கிறேன் என்று கூறிவிட்டார். அதன் பின் இந்த செய்தி சிறிது காலம் பரபரப்பாக பேசப்பட்டுவிட்டு, அதன் பின் ஓய்ந்துவிட்டது.

சின்மயியும், அமைதியாக இருந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் வைரமுத்து மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு கூறி உள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தி, அந்த பெண்ணை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். ஆனால் தனக்கு நடந்தது பற்றி என்னிடம் அவர் தெரிவிக்க இரண்டு ஆண்டுகளாகிவிட்டது.

காரணம் அவரது குடும்பத்தார் ஆதரிக்கவில்லை. வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட 17-வது பெண் இவர் என கூறியிருப்பதோடு, அந்த பெண் தனக்கு நேர்ந்த விஷயத்தை தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும் பதிவிட்டுள்ளார்.

அதில் அந்த பெண், நான் கல்லூரியில் படித்தபோது புத்த வெளியீட்டு விழாவில் வைரமுத்து பங்கேற்றார். அவரிடம் ஆட்டோகிராப் கேட்டேன். அவரும் கையெழுத்திட்டதுடன் தன் அலைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டார்.

நான் கண்டுகொள்ளவில்லை. பின்பு ஒரு டிவியில் வி.ஜே.வாக சேர்ந்தேன். அப்போது என் அலைப்பேசி எண்ணை கேட்டார், நானும் யோசிக்காமல் கொடுத்துவிட்டேன்.

அதன்பின் பின் பலமுறை போன் செய்து தொல்லை தந்தார். சென்னை மவுண்ட் ரோடு அருகே ஒரு இடத்திற்கு வரும்படி அழைத்தார்.

ஒரு மணிநேரத்தில் 50 முதல் 60 முறை கால் செய்தார், என்னை தேவதை என வர்ணித்தார். அவரின் தொல்லை தாங்க முடியாமல் நான் வேலைபார்த்த டிவி சேனல் உதவியோடு, அவரின் மனைவியிடம் பேசி அவரை அடக்கி வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.