இந்திய இசை வரலாற்றில் மிகப்பெரிய இடத்தில் தன் இசையால் மயக்கி வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அதேபோல் பிரமாண்ட படங்களை கொண்டு பெரிய பட்ஜெட்டை இழுப்பவர் வரிசையிலும் இருப்பவர் இயக்குநர் சங்கர். ஆரம்பத்தில் வெற்றி படங்களை கொடுத்தாலும் சில பெரிய பட்ஜெட் படத்திலும் பாக்ஸ் ஆபிஸிலும் குறை வைக்காதவர்.

அவருக்கே பேர் போன இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார் ஏ.ஆர். ரகுமான். ஆனால் இளையராஜா மற்றும் ஷங்கர் இதுவரை எந்த ஒரு படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை.

இயக்குநர் ஷங்கரின் முதல் படத்தில் இளையராஜா இணைய இருந்ததாகவும், அவரின் முன் கோபத்தால் அந்த படம் கைநழுவி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சங்கர் முதன் முதலாக இயக்குநராக அறிமுகமான படம் ஜென்டில்மேன். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முதலில் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் குஞ்சு மோகன் இருவரும் இளையராஜா தான் இந்த படத்தில் இசையமைக்க வேண்டும் என நினைத்து இருந்தார்களாம்.

ஆனால் இளையராஜாவின் ஆஸ்தான இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க இருந்த நடிகரை, தன்னுடைய படத்திற்கு சங்கர் அழைத்துக் கொண்டதால் அந்த படம் கைவிடப்பட்டதாம். மேலும் அந்த படத்திற்கு இளையராஜா தான் இசை அமைக்க இருந்தாராம்.

இந்நிலையில் ஷங்கர் இளையராஜாவின் அலுவலகத்திற்குச் சென்று பாடல்கள் வாங்க நெடு நேரம் காத்துக்கொண்டிருந்தாராம். மேலும் இளையராஜா போட்ட ட்யூன்கள் எதுவும் சரியில்லாத நிலையில் சங்கர் அவற்றை ரிஜக்ட் செய்துள்ளார்.

இதனால் டென்ஷனான இளையராஜா, உன்னுடைய படத்திற்கு பாடல்கள் போட முடியாது எனக் கூறி அனுப்பிவிட்டாராம். இளையராஜா இதே போல் அடிக்கடி கோபப்பட்டு பல பேருடன் சங்கடமான சூழ்நிலையை உருவாக்கி வைத்துள்ளார்.