தொலைக்காட்சி பிரபலம் நாஞ்சில் விஜயனை சில ரவுடிகள் வீடு புகுந்து தாக்கிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காயங்களுடன் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து தன்னை சூர்யா தேவி ரவுடிகள் வைத்து தாக்கினார் என்றார். இந்த நிலையில் மருத்துமவனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆன நாஞ்சில் விஜயன் பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர் பேசும்போது, திடீரென 3 ரவுடிகள் வீடு புகுந்து என்னை தாக்க ஆரம்பித்தார்கள். என்னுடன் இருந்த பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க ஒரு அறையில் அடைத்துவிட்டேன்.

பின்னர் என்னை அவர்கள் சரமாரியாக அடித்தார்கள் வலி தாங்க முடியாமல் நான் ரோட்டில் ஓடி வந்து விட்டேன்.

அப்போது என்னுடைய உடைகளை பிடித்து இழுத்து விட்டார்கள். துணியே இல்லாமல் காப்பாற்றுங்கள் என்று ரோட்டில் கத்திக் கொண்டே ஓடினேன் என கூறியுள்ளார்.