தமிழ் திரையுலகில் புது நடிகர்களின் வரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அதிலும் இளம் நாயகிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகி வருகிறது.

அவ்வாறாக தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் ரெபா மோனிகா ஜான் இவரைப்போன்று பல திறமையான நடிகைகள் தமிழ் சினிமாவில் இப்போது வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.

2016ம் ஆண்டு “ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்” என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் சினியுலகில் அறிமுகமானவர் ரெபா மோனிகா ஜான். தமிழில் 2018ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான “ஜருகண்டி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர்.

பின்னர் 2019ம் ஆண்டு கன்னட திரைப்படத்திலும் நடித்து அறிமுகமானார். சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

கடைசியாக, கடந்த ஆண்டு தீபாவளிக்கு, இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, உள்ளிட்ட பல இளம் நடிகைகள் இணைந்து நடித்த பிகில் படத்தில் மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் கால்பந்து வீராங்கணையாக நடித்திருந்தார்.

இப்படத்தின் மூலம் ரெபா செம பேமஸ் ஆன நடிகையாக மாறினார். இவர் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.