நடிகர் சியான் விக்ரமின் மகன் தான் துருவ் விக்ரம். இவர் ‘ஆதித்யா வர்மா’ என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் அப்பாவைப் போலவே துருவ் வெளிப்படுத்திய அபாரமான நடிப்பு திறமையால் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.

இதையடுத்து தற்போது இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தந்தையுடன் சேர்ந்து நடிக்க இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் துருவ் விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் விக்ரமும், துருவ் விக்ரமும் இணைந்துள்ளனர்.

ஏனெனில் இந்த போட்டோவுக்கு கீழே ‘அரைகுறை வேலைகள் வேண்டாம்’ என்ற புகழ்பெற்ற வெப் சீரியசான பிரேக்கிங் பேட்டின் வசனத்தையும் பதிவிட்டுள்ளார் துருவ்.

அப்பாவுடன் சேர்ந்து துருவ் விக்ரம் பாலாவை மறைமுகமாக தாக்கிப் பதிவை வெளியிட்டுள்ளார், இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். முதல் படத்திலேயே ஆஸ்கார் அவார்ட் வாங்க வேண்டும் என்றால் எப்படி முடியும்.? வாய்ப்பில்ல ராஜா! வாய்ப்பே இல்லை!