பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உண்டு, இவர் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்தவர்.

மேலும் இவர் இதுவரை 16 மொழிகளில் 40,000திற்கும் மேல் பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் செப்டம்பர் 25 ஆம் தேதி இவர் மறைந்தார், இந்த செய்தி அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் எஸ்.பி.பி அவர்களின் இளம் வயதில் எடுக்கப்பட்ட அறிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதை கண்ட ரசிகர்கள் பலரும் அவரா இது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.