ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது பைிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் பலப்பரீட்சை நடத்தியது.

இதில் ‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் அணி 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. டி காக் 23 ரன்களிலும், ரோகித் சர்மா 35 ரன்களிலும், (23 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தனர்.

ஆனால் இறுதி கட்டத்தில் மும்பை பேட்ஸ்மேன்கள் அதிரடியில் வெளுத்து கட்டினர். இதில் அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ் 79 ரன்களுடன் (47 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 30 ரன்களுடனும் (19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தொடர்ந்து 194 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆனாலும் முழு மூச்சுடன் வெற்றிக்கு போராடிய தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 70 ரன்களில், (44 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) பொல்லார்ட்டின் அற்புதமான கேட்சில் ஆட்டமிழந்தார்.

முடிவில் ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 136 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் பும்ரா 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஐ.பி.எல்.-ல் அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இதன் மூலம் மறுபடியும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது