நடிகை வனிதா நாளை தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு தனது குடும்பத்துடன் பெங்களூர் செல்லும் காட்சியினை தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

நடிகை வனிதா விஜயக்குமார், கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, எலிசபெத் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்து வந்ததால், இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமீபத்தில் சற்று ஒய்ந்திருந்த நிலையில் தற்போது வனிதா வெளியிட்டிருக்கும் புகைப்படம் மீண்டும் மக்கள் மத்தியில் பேச்சுப் பொருளாக இருந்து வந்தது.

அதற்கெல்லாம் அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்த வனிதா தனது 40வது பிறந்ததினத்தினை நாளைக் கொண்டாடுகின்றார். இதற்காக இவர் வெளியூர் சென்றுள்ள காட்சியினை தற்போது காணலாம்.

வனிதாவின் இக்காட்சியினை அவதானித்த அவரது ஹெட்டர்ஸ் பலர் திட்டியும், சில ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.