விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக அறிமுகமாகி தனது கலகலப்பான பேச்சாலும், எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத குணத்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.

தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது திறமையால் மட்டும் முன்னேறிய அறந்தாங்கி நிஷா தற்போது தொகுப்பாளினியாகவும், வெள்ளித்திரையில் ஏராளமான படங்களில் காமெடி நடிகையாகவும் நடித்து வருகிறார். நிஷாவின் கணவர் ரியாஸ். இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

 

அழகிய ஜோடியான இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண்குழந்தை இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு தனது குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அறந்தாங்கி நிஷா “இதுதான் எனது உலகம்” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் க்யூட் பேபி என நிஷாவின் மகளை கொஞ்சி வருகின்றனர்.