கும்கி படத்தில் இணைந்து நடித்திருந்த விக்ரம் பிரபு – லட்சுமி மேனன் ஜோடி, பிரபல இயக்குனரின் படம் மூலம் மீண்டும் இணைய உள்ளனர்.

சுந்தரபாண்டியன் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு வெளியான றெக்க படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன்பின், படிப்பில் கவனம் செலுத்திய லட்சுமி மேனன் நடிப்பிற்கு சில ஆண்டுகள் முழுக்கு போட்டார். இந்நிலையில் அவர் உடல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். இவர் அடுத்ததாக விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே கும்கி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். கொம்பன், குட்டிப்புலி போன்ற படங்களை இயக்கிய முத்தையா இப்படத்தை இயக்க உள்ளார். ‘பேச்சி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது