சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் இறந்த செய்தி அனைத்துக் கலைஞர்களையும் கண்கலங்க வைத்தது.

ஹாஸ்பிடல் பில் கட்ட முடியாமல் தடுமாறிய வடிவேல் பாலாஜிக்கு விஜய் டிவி எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்பது போன்ற கருத்துகள் வெளியாகியது.

இதனால் விஜய் டிவிக்கு பெரிதும் கெட்ட பெயர் வந்தது. இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த விஷயங்களில் விஜய் டிவி கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது.

விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்க உள்ளதும். ஆனால் இதற்கிடையில் மக்களை ஏமாற்றுவதற்காக விஜய் டிவி ஒரு வேலையை செய்துள்ளது.

அதாவது வடிவேல் பாலாஜி இறந்ததற்கு கவலை தெரிவித்து ஒரு நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் மக்களின் செண்டிமெண்டை பயன்படுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டிஆர்பி ஏற்ற முடிவு செய்துள்ளார்களாம்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள், மருத்துவ செலவுக்கு உதவ முடியவில்லை, ஆனால் அவருடைய சாவை வைத்து நன்றாக காசு பார்க்கிறார்கள் என கண்டபடி பேசி வருகின்றனர்.

விஜய் டிவி இந்த மாதிரி செய்வது ஒன்றும் புதிதல்ல. நாளுக்கு நாள் விஜய் டிவியின் மீதான மரியாதை மக்களிடையே குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.