ஈரோடு மாவட்டம் அந்நியூர் அருகே உள்ள ஒரிச்சேரி மல்லியூர் என்கிற கிராமத்தில் வசித்து வருபவர் இளங்கோ வயது 22. திருச்செங்கோடு தேக்கவாடி கிராமத்தில் வசிக்கும் ரம்யா வயது 22. இவர்கள் இருவருக்கும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிஎம்இ படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டது. பிறகு இருவருக்குள்ளும் காதல் மலர்ந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போயி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் ஈரோட்டில் இருக்கும் தனியார் டிவி ஷோரூமில் இளங்கோ வேலை செய்து வந்திருக்கிறார்.வழக்கம்போல நேற்று இரவு வேலை முடிந்து இளங்கோ வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டில் மனைவி ரம்யா தூக்கில் தங்கியிருக்கிறார் .இதை கண்டதும் மனமுடைந்த இளங்கோ மனைவி இல்லாத இந்த உலகில் தானும் இருக்கக்கூடாது என நினைத்து அதே இடத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்து வீட்டார்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் தூக்கில் தூங்கி இருக்கிறார்கள்.இதைப் பார்த்ததும் அதிர்ந்து போன அவர்கள் தாமதிக்காமல் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில்

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாகத்தான் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.