விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதனை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த வருட பிக் பாஸ் சீசன் காலதாமதமாக தொடங்க உள்ளதற்கு காரணம் கொரோனவைரஸ் தான் என்பது நாம் அறிந்ததே.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 4 தேதி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் பங்குகொள்ள உள்ள போட்டியாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது சமூக வலைதள பூதக்கண்ணாடிகள்.

பிக் பாஸ் போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ,

அனிதா சம்பத்
ரம்யா பாண்டியன்
ரியோ ராஜ்
நடிகை ரேகா
VJ அர்ச்சனா
ஷிவானி நாராயணன்
அறந்தாங்கி நிஷா
சிங்கர் ஆஜித்
சனம் ஷெட்டி
கேப்ரில்லா
பாலாஜி முருகதாஸ்
ஜித்தன் ரமேஷ்
ஆரி
மற்ற சீசன்களை விட இந்த சீசனில் ஆண்களை விட பெண்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதைக் கேள்வியுற்ற பிக்பாஸ்சின் இளம் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அக்டோபர் 4 ஆம் தேதி எப்போ வரும் என்று நாட்களை எண்ணி காத்துக்கொண்டிருக்கின்றனர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகர்கள்.