தல அஜித் குமார் நடிப்பில் உருவாகிவரும் வலிமை திரைப்படத்தை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் ரெட் ஹில்ஸ் பகுதியில் துவங்கி இருக்கிறது. இதில் இத்திரைப்படத்தின் வில்லனாக கார்த்திகேயா நடிக்கவிருக்கிறார் எனவும் அவர், ரெட் ஹில்ஸ் பகுதியில் நடைபெறவிருக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் கதையில் பெண்களுக்காக சில மாறுதல்களை செய்யச்சொல்லி ஆலோசனைகளை வழங்கி உள்ளதாக தெரிகிறது. ஃபேமிலி ஆடியன்ஸ்களை ஈர்க்கவும் குறிப்பாக பெண்களை சினிமா தியேட்டருக்கு வர வைக்கும் நோக்கில் அவரது விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் அமைந்தன. இதனை தல இழக்க விரும்பாத நிலையில் இத்திரைப்படத்திலும் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் காட்சிகளை இணைக்க அஜித்குமார் ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது.