தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்த நடிகைகளில் மிக முக்கியமானவர் மனோரமா. குணச்சித்திர கதாபாத்திரங்களில் இந்திய சினிமாவையே மிரள வைத்தவர்.

சினிமாவில் சாதித்த நடிகர் நடிகைகள் பற்றி பயோபிக் எடுத்து அவரது சினிமா வாழ்க்கை மற்றும் சினிமா அல்லாத வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றி ரசிகர்களுக்கு தெள்ளத்தெளிவாக விளக்குவார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் முன்னாள் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதே போல் மனோரமாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசைப்பட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் பிரபல நடிகை.

ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் மனோரமா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அது ரசிகர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த வடசென்னை படம் ஒன்றே போதும், அவருக்கு மனோரமா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தகுதி இல்லை என்று என பல்வேறு வகைகள் ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.

வடசென்னை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்திற்கு நிறைய நெகட்டிவ் வந்தது குறிப்பிடத்தக்கது.

தனுசுடன் அளவுக்கதிகமான ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் கெட்ட வார்த்தை என தன்னுடைய பெயரை பெரிய அளவில் டேமேஜ் செய்து வைத்துள்ளார்.