சினிமாவில் காஸ்டிங் கவுச் அதிகளவில் இருக்கிறது என்று அதில் பாதிக்கப்பட்ட நடிகைகளோ அல்லது பெண்கள் புகார் அளித்து வருகிறார்கள். அவை மீ டூ மூலம் வெளியில் தெரியவர ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் சினிமா வட்டாரங்களில் தொடர்ந்து தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பலர் நடிகைகளிடம் சில்மிஷம் செய்வதை பல நடிகைகள் சமீபகாலமாக தொடர்ந்து நேரடியாகவே கூறி வருகின்றனர்.

அந்தவகையில் பிரபல பாலிவுட் இயக்குநருமான மற்றும் தமிழில் இமைக்காநொடிகள் படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப் மீது பயல் கோஷ் என்ற நடிகை, தன்னிடம் அவர் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துமீறி தன் மீது அவருடைய கால் சட்டையை கழட்டிவிட்டு பாய்ந்ததாகவும், தான் அங்கிருந்து தப்பித்து வந்து விட்டதாகவும் சமீபத்தில் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளார்.

ஆனால் பாலிவுட் பிரபலங்கள் பலரும் அனுராக் காஷ்யப் மீது நல்லவிதமான அபிப்ராயமே தெரிவித்து வருவதால் அவர் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டு வைத்தது போல் தெரிகிறது. இயக்குநருக்கு ஆதரவாக பல நடிகைகள் தங்கள் கருத்துகளை கூறி வரும் நிலையில் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் பயல் கோஷ் நடிகை கங்கனா ரனாவத் அது மிகவும் நெருங்கியவராகவும் கருதப்படுகிறது. சமீபத்தில் கங்கனா ரனாவத் அனுராக் காஷ்யப் உடன் சமூகவலைதளத்தில் நேரடியாக சண்டைக்கு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனுராக் காஷ்யப் பெயரைக் கெடுக்கவே கங்கனா ரனாவத் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆனால் பயல் கோஷ் கொடுத்துள்ள கேஸ் அடிப்படையில் போலீஸார் முதல்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விவகாரம் சென்று கொண்டிருக்க திடீரென பயல் கோஷ் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு காரணம் அனுராக் காஷ்யப் தான் என்பதை போன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

திட்டமிட்டு செய்ததாக கருதப்படும் இந்த விஷயத்தில் இன்னும் திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவரும் என தெரிகிறது. சமீபத்தில் நடிகை கஸ்தூரி இதுபற்றி கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.