ஆகஸ்ட் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி நேற்று (செப்டம்பர் 25) நம்மை எல்லாம் விட்டு பிரிந்தார்.

அவரின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.அவரது இறுதி ஊர்வலத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் இளைய தளபதி விஜய் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.

ஆனால் அஜித் சினிமாவில் முதன் முதலாக நடிகராக அறிமுகமாகக் காரணமாக இருந்த எஸ்.பி.பிக்கு நேரில் அஞ்சலி செலுத்த வரவில்லை.

கொரோனா காரணம் வரவில்லை என்றாலும் ஒரு அறிக்கையாவது கொடுத்திருக்கலாம் என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

எஸ்.பி.பி மகன் சரணும், அஜித்தும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்கள். சிறு சிறு விளம்பரங்களில் நடிக்கும் போது சரணின் உடைகளை தான் அஜித் போட்டு செல்வாராம்.

அஜித்திற்கு முதல் படமான பிரேம புஸ்தகம் எனும் தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பே எஸ்.பி.பி அவர்களால் தான் கிடைத்தது.

அப்படி உதவியவருக்கு ஒரு இரங்கல் செய்தி கூட கொடுத்தவில்லையே என்பது பலரின் ஆதங்கம் என்று பலரும் கூறினார்கள் இது குறித்து விசாரிக்கையில் சற்று முன்னர் வந்த தகவல் என்ன என்றால் தனது நண்பனான சரணிற்க்கு தொலைபேசி மூலம் தனது இரங்கலை தெரிவித்து உள்ளதாகவும் மேற்கொண்டு விரைவில் சரணை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளதாக பிரபல தயாரிப்பாளர் JSK கோபி தெரிவித்துள்ளார்.


அதுமட்டும் இல்லாமல் அஜித்தின் அப்பா உடல் நிலை சீராக இல்லை . எனவே அஜித் அவர்கள் ஓரிரு நாட்களில் கண்டிப்பாக சரணை சந்திக்க நேரில் செல்வார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது