உயிரிழந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்காக, இசையமைப்பாளர் இளையராஜ மோட்ச தீபம் ஏற்றிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னையில் நேற்று உயிரிழந்த பாடசர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல், இன்று அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், எஸ்.பி.பியின் நெருங்கிய நண்பரும் இசையமைப்பாளருமான இளையராஜா, எஸ்.பி.பி ஆன்மா சாந்திடைய வேண்டி திருவண்ணாமலை ரமணா ஆசிரமத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளார்.

அது தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது.

உடல்நிலை சரியில்லாமல், மிகவும் கவலைக்கிடமாக எஸ்.பி.பி இருப்பதாக செய்தி வெளியான போது, எஸ்.பி. சீக்கிரம் எழுந்து வா என்று இளையராஜா கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி இறந்த பின்பு, உன்னை சீக்கிரம் எழுந்து வா என்று சொன்னேன், ஆனால் இப்போது நீ எங்கு போனாய் என்று மிகுந்த வேதனையுடன் இரங்கல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.