மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் மலையாள திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் மலையாளம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 400 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் மிகப்பிரபலமான நடிகரான இவர் இந்திய அரசின் மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதை 1998-ல் பெற்றார். நடிகர் மம்முட்டி மலையாள தகவல் தொடர்புகளின் தலைவராகவும், அக்ஷயா திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவராகவும் பணியாற்றி வருகிறார். இவ்வாறு பல்வேறு முகங்களை காண்பித்த மலையாள நடிகர் மம்முட்டி தற்போது விவசாய அவதாரம் எடுத்துள்ளார்.

லாக் டவுன் ஆரம்பித்ததிலிருந்து கிட்டத்தட்ட 200 நாட்களாக தனது வீட்டை விட்டு வெளிவராத மெகா ஸ்டார் மம்முட்டி தற்போது ஒரு தீவிர தோட்டக்காரராகவும், இயற்கை புகைப்படங்கள் எடுக்கும் போட்டகாரராகவும் மாறிவிட்டாராம்.

நடிகர் மம்முட்டி இந்த லாக் டவுன் பீரியட்ல தீயா வேலை செஞ்சு அவரோட தோட்டத்தை பழங்களால நிரப்பி வைத்திருக்கிறாராம். தோட்டத்தை பராமரிப்பது, பழங்களை அறுவடை செய்வதும் போன்ற வேலைகளில் பிசியாக இருந்துருக்காரு. இதுக்கு ப்ரூப் அவர் வெளியிட்டுருக்க போட்டோதான்.

லாக் டவுன் முடிவடைந்துள்ள நிலையில் இந்த வாரத்திலிருந்து மஞ்சுவாரியர் உடன் இணைந்து ‘தீ பிரீஸ்ட்’ படப்பிடிப்பில் மீண்டும் நடிக்க தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

அஜித் இந்த நேரத்தை வீண் அடிக்காமல் மூலிகை தோட்டம் ஆரம்பித்தது போல, மெகா ஸ்டாரே விவசாயியா மாறிவிட்டாரே என சமூக வலைதளவாசிகள் இவரது புகைப்படங்களை பெருமளவில் வைரலாகி வருகின்றனர்.