தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை.

எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் ஆயிரம் நிலவே வா பாடல் இவரை எங்கேயோ கொண்டு சென்றது.

அதோடு ரஜினி, கமல், விஜய், அஜித், சல்மான் கான், சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன் என இவர் இந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுக்கும் பாடியுள்ளார்.

இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, அதிலும் இவரும் இளையராஜாவும் இணைந்தால் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான்.

இந்த அளவிற்கு பேர் புகழை கொண்ட இவருக்கு கடந்த மாதம் கொரொனா தொற்று ஏற்பட்டது, இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகினர்.

அதை தொடர்ந்து அவர் பூரண குணமாக தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பல திரைப்பிரபலங்கள் இவருக்காக கண்ணீர் வடித்தனர். ரசிகர்களும் மிகவும் வருத்தத்துடன் இருந்தனர்.

கொஞ்சம் உடல்நலம் தேறிய அவர் தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவை ஒட்டு மொத்த இந்திய மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் சரியாக 1.04 விண்ணை விட்டு மறைந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் RIP SPB என பதிவு செய்துள்ளார்.