கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னணி பாடகர் எஸ்.பி.பி. இன்று மதியம் 1.04 மணி அளவில் மரணமடைந்தார்.

இவரின் மறைவு இந்திய திரையுலகிற்கு மிக பெரிய இழப்பையும், துயரத்தையும் அளித்துள்ளது. இவரின் உடல் நம்மை விட்டு சென்றாலும், இவரின் குரல் என்றும் நம்மைவிட்டு நீங்காது.

இந்நிலையில் எஸ்.பி.பி அவர்கள் இறுதியாக தனது குரலில் பாடியுள்ள பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தில் இடம்பெற்றுள்ளது.

இது கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் opening பாடலாக தான் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.