கொரோனா தொற்று ஏற்பட்டு சற்றும் யாரும் எதிர்பாராத விதமாக இன்று உயிர் இழந்தார் நம் பாடும் நிலா எஸ்.பி.பி அவர்கள்.

எம்.ஜி.எம் மருத்துவமனையில் இருந்து பாடகர் எஸ்.பி.பி உடல் தற்போது அவரின் வீட்டிற்கு எடுத்து வந்தடைந்துள்ளது.

மேலும் இன்னும் சில மணி நேரங்களில் பொதுமக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த எஸ்.பி.பியின் உடல் சத்தியம் தியேட்டரில் திரைப்பிரபலங்களுக்காக சற்று நேரம் வைத்துவிட்டு, அதன் பின் சென்னை பெரியபாளையத்தில் இருக்கும் தாமரைப்பக்கம் பகுதியில் எஸ்.பி.பியின் பண்னை வீடு உள்ளது.

அங்கு அவரின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதைப்பார்க்கும் போது மனம் பதறுகிறது, அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதையும் உணர முடிகிறது.

இதோ அந்த புகைப்படம்,