இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வலிமை, இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் தமிழ் சினிமாவே இப்படத்தை பெரிய எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 60 % வரை முடிந்த நிலையில் கொரோனா காரணமாக படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது வலிமை திரைப்படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நடிகர் அஜித் கலந்து கொண்டாரா என்பது குறித்து தெரியவில்லை, ஆனால் படப்பிடிப்பு பணிகள் நடத்து கொண்டு இருக்கிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..