தமிழ் சினிமாவில் அனைவராலும் பாராட்டக்கூடிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்த் 2005இல் அரசியல் கட்சி தொடங்கி 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைமையில் மக்கள் நல கூட்டணி உருவானது.

முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார், ஆனால் சில ஆண்டுகளாக உடல்நிலை குறைவால் மிகுந்த அவதிப்பட்டு வந்த கேப்டன் விஜயகாந்த் சில தினங்களுக்கு முன்பு பேட்டி கொடுக்கும் அளவிற்கு உடல் நலம் தேறி வந்தார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தற்போது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கிளப்பிது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்ளும் கேப்டன் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கமாகும்.

அந்த நிலையில் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டதும், உடனடியாக அதனை மருந்து கொடுத்து சரி செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது பூரண உடல் நலத்துடன் கேப்டன் விஜயகாந்த் இருப்பதாக தேமுதிக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போன்ற சம்பவங்கள் மக்களுக்கு பெரும் வேதனை அளிக்கிறது.

ஏனென்றால் இசையை மூச்சாக சுவாசிக்கும் எஸ் பி பாலசுப்ரமணியம் சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல் நலம் தேறி வீடு திரும்பும் நிலைமைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் விஜயகாந்த் மீண்டும் எழுந்து வர வேண்டும், தேர்தல் களத்தில் வெற்றி பெற வேண்டும்.