எந்த அறிகுறியும் இல்லாமல் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ஒரே ஒரு பொது நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டார் என தெரியவந்துள்ளது.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

இதற்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின் சென்னை திரும்பிய அவர், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

மேலும் கொரோனா பரவல் காரணமாக எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதை விஜயகாந்த் தவிர்த்து வந்தார்.

இதனிடையில் தேமுதிக-வின் 16ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கடந்த 14ஆம் திகதி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்றார்.

அப்போது அங்கு அதிகளவிலான தொண்டர்கள் அவருடன் அருகில் இருந்தனர்.

இந்த நிலையில் தான் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் விஜயகாந்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது பூரண உடல் நலத்துடன் கேப்டன் விஜயகாந்த் இருப்பதாக தேமுதிக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போன்ற சம்பவங்கள் மக்களுக்கு பெரும் வேதனை அளிக்கிறது.

ஏனென்றால் இசையை மூச்சாக சுவாசிக்கும் எஸ் பி பாலசுப்ரமணியம் சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் உடல் நலம் தேறி வீடு திரும்பும் நிலைமைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் விஜயகாந்த் மீண்டும் எழுந்து வர வேண்டும், தேர்தல் களத்தில் வெற்றி பெற வேண்டும்.