பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி எதிர்வரும் அக்டோபர் 4ம் திகதி திட்டமிட்டபடி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி நேரத்தில் இரு போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக செய்திகள் கசிந்த நிலையில் உடனடியாக பிரபல தொகுப்பாளி ஒருவரை விஜய் டிவி களமிறக்கி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வரும் அர்ச்சனா தான் லேட்டஸ்ட்டாக பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் இணைந்துள்ள அந்த பிரபலம்.

விஜேவாகவும் நடிகையாகவும் நடித்துள்ள அர்ச்சனா நிகழ்ச்சிக்கு வந்தால், பிக் பாஸ் வீடு கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, அர்ச்சனாவுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.

இதுவரை வெளியான தகவலின்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகைகள் ரம்யா பாண்டியன், ஷிவானி, பாடகர் வேல்முருகன், சூப்பர் சிங்கர் புகழ் ஆஜித், ரியாலிட்டி டான்ஸ் நிகழ்ச்சி புகழ் கேப்ரில்லா, ஆங்கர் அர்ச்சனா, மற்றும் நடிகை ரேகா ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் பழம்பெரும் நடிகர் அனுமோகன் மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது வெளிவந்துள்ள பட்டியல் கிட்டத்தட்ட உறுதியான பட்டியல் என்றும் கூறப்படுகிறது.