விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு விரைவில் தொடங்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அத்துடன் நிகழ்ச்சிக்கான புரமோஷன் வீடியோக்களும் வெளியிடப்பட்டன.

அன்று முதலே நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் கசியத் தொடங்கின. ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன், சுனைனா உள்ளிட்டோர் இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் அத்தகவலை மறுத்தனர்.

இந்நிலையில், இம்முறை கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்களை யூகிக்குமாறு விஜய் டிவியே அறிவித்துள்ளது. நேயர்களின் யூகம் சரியாக இருக்கிறதா என பார்க்கலாம் என்றும் விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி நடிகர்களின் பெயர்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு வருகிறார்கள். ‘டைசன்’ பட வில்லன் நடிகர் பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி, ரியோ ராஜ், ஷாலு ஷம்மு, அம்ரிதா ஐயர் உள்ளிட்டோர் இம்முறை போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாகவும் கதகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தற்போது முதல் 7 போட்டியாளர்கள் யார் யார் என்ற விபரங்கள் நம்ப தகுந்த வட்டரங்களிடம் இருந்து நமக்கு கிடைத்துள்ளன. அதன் படி, நடிகர்களின் ஜித்தன் ரமேஷ், காமெடி நடிகர் அணு மோகன், தொகுப்பாளரும் நடிகருமான ரியோ ராஜ், குட்டி பாபி சிம்ஹா என்று அறியப்படும் பாடகர் அஜீத் காலிக் ஆகியோரும். நடிகை, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், விஜய் டிவி கேப்ரில்லா ஆகியோரும் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.

கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் என நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. நிகழ்ச்சிக்கு தடை செய்ய சொல்லி யாரேனும் பிரச்சனை செய்தால் அதை சமாளிக்க சட்ட ஆலோசகர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கேப்ரியேல், நடிகர் ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், ஷிவானி, சூப்பர் சிங்கர் ஆஜித் என சிலர் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சீசன் 2 ல் பாடகராக அனந்த் வைத்யநாதனும், சீசன் 3 ல் மோகன் வைத்யாவும் கலக்கினார்கள். அவர்களின் இடத்தை நிரப்பும் விதமாக சீசன் 4 ல் கிராமிய பாடகரான வேல்முருகனை ஓகே செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் மதுர குலுங்க, ஆடுங்கடா மச்சான் என பல ஹிட் பாடல்களை பாடி மனங்களை கவர்ந்தவர்.