நீட் தேர்வின் கொடுமையால் எத்தனையோ மாணவ, மாணவிகளின் உயிர்ப் பலி வாங்கப்பட்டு விட்ட நிலையில், மனிதாபிமானமும், சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்பதை எதிரொலிக்கிறார்கள்.

நீட் விவகாரத்தில் சூர்யாவின் மீது மத்திய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் பலரும் கடுப்பில் உள்ளது அப்பட்டமாக தெரிய வருகிறது. மேலும் சூர்யா வெளியிட்ட அறிக்கை தற்போது வரை பரபரப்பாக பேசி வருகிறார்கள்.

எப்படியாவது சூர்யாவை அடக்கி வைக்க வேண்டும் என தொடர்ந்து அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

இருந்தாலும் சூர்யா அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் படிப்பு சம்பந்தமாக மாணவர்களுக்கு எதிராக வரும் கருத்துக்களை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டு தான் இருப்பார்.

அந்த வகையில் சமீபத்தில் நீட் தேர்வை எதிர்த்து அறிக்கை வெளியிட்டது அனைவருக்கும் தெரியும். இதனால் அவருக்கு எவ்வளவு குடைச்சல்கள் வந்தது எனவும் தெரியும்.

இதையெல்லாம் மிஞ்சும் வகையில் அர்ஜுன் சம்பத் என்பவர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் பரிசு தருவேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தன்னுடைய பதிலுக்கு சூர்யா, என்னை அடித்தால் ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை ஏழை மாணவனுக்கு கொடுங்கள் என கூறி நெகிழ்ச்சி சம்பவத்தை ஏற்படுத்தியுள்ளார் சூர்யா.

இதற்கு பல பிரபலங்கள் ரசிகர்கள் சூர்யாவிற்கு ஆதரவாக பேசியும் கருத்துகளை கூறியும் வருகிறார்கள்.