நடிகை சரண்யா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது குணச்சித்திர நடிகையாகவும் முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்திலும் கலக்கி வருகிறார்.

உலக நாயகன் கமல்ஹாஸனுடன் நாயகன் எனும் படத்தில் தான் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்த சில வருடங்களிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் பட்டையை கிளப்பினார்.

ஒரு கட்டத்தில் பிரபல நடிகர் ஒருவரை சரண்யா திருமணம் செய்துகொண்டு ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்று விட்ட செய்தி தற்போது தான் பெருமளவில் ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.

சரண்யா தற்போது பொன்வண்ணன் என்ற நடிகரை திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் சரண்யா முதல் முதலாக சரவணன் மீனாட்சி சீரியலில் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்த ராஜசேகர் என்பவரை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஒரு வருடம் கூட இந்த திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை.

அதன் பிறகு 1995 ஆம் ஆண்டு பொன்வண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது வரை அவருடன் வாழ்ந்து வருகிறார். ராஜசேகர் சமீபத்தில்தான் இயற்கை எய்தினார்.