தமிழ் திரையுலக முன்னணி நடிகராகவும், ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் நடிகராகவும் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக விளங்கி வருபவர் நடிகர் அஜித் குமார்.

இவர் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இரண்டாம் முறையாக நடித்து வருகிறார் தல அஜித்.

மிகவும் சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் உருவாகி வரும் வலிமை படத்தில் தல அஜித் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என்று தெரிவிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் அஜித்துக்கு இணையான கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் First லுக் போஸ்டர் போலவே தல அஜித்தின் தீவிர ரசிகர்கள் பேன் மேட் போஸ்ட்டரை வடிவமைத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் வெளிவந்த சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…