சூர்யா சமீபகாலமாக சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருவதால் அவரை எப்படி அடக்குவது என்று தெரியாமல் அவரது அடிமடியில் கை வைக்க முடிவு செய்துவிட்டனர் அரசியல்வாதிகள்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு பயம் காரணமாக மூன்று மாணவர்கள் ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட விஷயம் தமிழ் நாட்டையே அதிர வைத்தது.

அதனை எதிர்த்து மத்திய மற்றும் மாநில அரசுகளை வெளுத்து வாங்கி அறிக்கை வெளியிட்டிருந்தார் சூர்யா. சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் பலரை படிக்க வைத்து வருவதால் அதனுடைய கஷ்டம் அவருக்குத் தெரியும்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யாவின் இந்த அறிக்கை அனைவரிடமும் பலத்த வரவேற்ப்பை பெற்றது பல அரசியல் வாதிகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தொடர்ந்து சூர்யாவுக்கு டார்ச்சர் கொடுத்து வருகின்றனர். சூர்யா நடிப்பில் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் சூரரைப்போற்று.

தற்போது இந்த படத்தில் இருந்து வெளிவந்த மண்ணுருண்ட எனும் பாடல் மீதுள்ள வழக்கை விசாரிக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் அமேசான் தளத்தில் படம் வெளியாகாமல் இருக்க என்னென்ன செய்ய முடியுமோ, அந்த அளவுக்கு இறங்கி செய்ய முடிவு செய்துள்ளார்களாம் பிரபலங்கள். இனி சூர்யாவின் ஒவ்வொரு படமும் பல சர்ச்சைகளை சந்திக்கும் என்கிறது சினிமா வட்டாரம்.

நல்லதுன்னு யாரும் எதுவும் செய்துவிட கூடாது!