மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை இயக்க போகிறார் என்ற செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.

தற்போதைக்கு தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் உள்ளன.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்தது ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது.

ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட். ரஜினிகாந்த்காக எழுதிய கதையில் தற்போது கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் கமலஹாசன் தனது 232 ஆவது படத்தை தயாரிக்க உள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை 2021 சம்மருக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் தான் தற்போது இணையதளத்தில் செம ட்ரெண்ட் ஆக உள்ளது.