விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. கொரோனவின் அச்சுறுத்தல் ஒருபுறம் இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பிக்பாஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு போட்டியாளர்களையும் தனிமைப்படுத்தப்பட்டு, அதற்குப் பின்னர்தான் பிக் பாஸ் வீட்டில் அனுப்பி வைக்கின்றனர். யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற 11 பேர் கொண்ட லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கமலஹாசன் நான்காவது முறையாக தலைமை தாங்கி பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்த உள்ளார். எதிர்பார்த்ததை விட அதிகமாக வரவேற்பு இரண்டு பிரமோஷன் வீடியோவுக்கு கிடைத்துள்ளது.

இதனால் விஜய் டிவியின் டிஆர்பி ஏறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஐபிஎல் தொடருக்கு நிகராக ரசிகர்களை கொண்டுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரிப்பதற்காக கவர்ச்சியை, சண்டை என்று அனைத்தையும் இறக்க உள்ளனர்.

சிட்டிசன் பட நாயகி வசுந்தரா தாஸ், விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷன் போன்றோரும் இந்த லிஸ்டில் அடிபடுகின்றனர்.

போட்டியில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களின் முழு லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஷாலு ஷம்மு
சனம் ஷெட்டி
கிரன் ரதொட்
அமிர்தா ஐயர்
சிவானி நாராயணன்
ரியோ ராஜ்
அமுதவாணன்
கரூர் ராமன்
புகழ்
பாலாஜி முருகதாஸ்
ஆர் ஜே வினோத்