தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான ஸ்ரேயா தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் ஆகிய நடிகர்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தெலுங்கிலும் உச்ச நடிகர்ககளுடன் நடித்து புகழ்பெற்றார்.

இதையடுத்து ஆண்ட்ரே கொஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார். அவ்வப்போது கணவருடன் சில ரொமான்டிக்கான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாராம் பக்கத்தில் சிகப்பு நிறத்தில் லாங் கௌன் அணிந்துகொண்டு செம அழகான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 37 வயதிலும் இளம் நடிகை போன்று அழகு மாறாமல் இருக்கும் ஸ்ரேயாவை கண்டு இணையவாசிகள் ரசனையில் மூழ்கி புது வரவுகள் எதற்கு நீங்கள் இன்னும் ஒரு 10 வருஷத்துக்கு தமிழ் சினிமாவில் ரவுண்டு அடிக்கலாம் என கூறி வருகின்றனர்.