தமிழ் சினிமாவின் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக மற்றும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்திலும், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஓணம் பண்டிகையை கொண்டாட தனது காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் கேரளாவிற்கு பறந்து சென்றார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து தனது காதலனுடன் நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை கொண்டாட தனி விமானத்தில் செல்ல செலவளித்து தொகை மட்டுமே ரூ. 40 லட்சம் என தெரிவிக்கின்றனர்.

மேலும் ஒரு தனி விமானத்தில் செல்ல நடிகை நயன்தாரா ரூ.40 லட்சம் வரை செலவளித்துள்ளாரா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.